பனிமூட்டம்pt desk
தமிழ்நாடு
வாணியம்பாடி: இரவில் மழை... காலையில் பனிமூட்டம்... முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்ற வாகனங்கள்
வாணியம்பாடியில் அதிக அளவு பனிமூட்டம் இருந்ததால் வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே சென்ற வாகன ஓட்டிகள்.
செய்தியாளர்: ஆர்.இம்மானுவேல் பிரசன்னகுமார்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று நள்ளிரவு கனமழை வெளுத்து வாங்கியது. இந்நிலையில், இன்று காலை வாணியம்பாடி பகுதிகளில், சாலையில் எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவிற்கு அதிக அளவிலான பனி மூட்டம் காணப்பட்டது.
பனிமூட்டம்pt desk
இதையடுத்து வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டபடியே சென்றனர். அதேபோல் ரயில்வே தண்டவாளங்கள் உள்ள பகுதியிலும் பனிமூட்டம் அதிகமாக காணப்பட்டது.
புரட்டாசி மாதம் வரவேண்டிய பனிக்காலம், பருவம் தவறி ஐப்பசி மாதத்தில் வந்துள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், விவசாயிகளும் தெரிவித்தனர்.