வாணியம்பாடி: கோழிப்பண்ணையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து-3600 கோழிக்குஞ்சுகள் தீயில் கருகி உயிரிழப்பு

வாணியம்பாடி அருகே கோழிப்பண்ணையில் ஏற்பட்ட திடீர் தீவிபத்து, 3600 கோழிக்குஞ்சுகள் தீயில் கருகி உயிரிழப்பு
கோழிப்பண்ணை
கோழிப்பண்ணைபுதியதலைமுறை

வாணியம்பாடி அருகே கோழிப்பண்ணையில் ஏற்பட்ட திடீர் தீவிபத்து, 3600 கோழிக்குஞ்சுகள் தீயில் கருகி உயிரிழப்பு

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தெக்குப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ், இவர் அந்தப் பகுதியில் அவருக்கு சொந்தமான நிலத்தில் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார்,

இந்நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ரமேஷ் 3600 கோழிக்குஞ்சிகளை வாங்கி கோழிப்பண்ணையில் வளர்ப்பதற்காக விட்டிருந்த நிலையில், இன்று ரமேஷின் கோழிப்பண்ணையில் மின்கசிவு காரணமாக திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

இதனால் கோழிப்பண்ணை முழுவதும் தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது. பின்னர் இதுகுறித்து தகலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வாணியம்பாடி தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரப்போராட்டத்திற்கு பிறகு கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதற்குள் கோழிப்பண்ணையில் இருந்த சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 3600 கோழிக்குஞ்சுகளும் தீயில் எரிந்து நாசமாகின.

இதனை தொடர்ந்து இத்தீவிபத்து குறித்து அம்பலூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், மின்கசிவினால் கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீவிபத்தில் 3600 கோழிக்குஞ்சுகள் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோழிப்பண்ணை
திருப்பூர் | மதுபோதையில் ரயிலில் அராஜகம்... தட்டிக் கேட்டவர்களுக்கு மிரட்டல் இறங்கிய இளைஞர்கள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com