\
Road accident
Road accidentpt desk

வாணியம்பாடி: கார் மீது லாரி மோதிய விபத்து - குலதெய்வம் கோயிலுக்குச் சென்ற மூதாட்டி உயிரிழப்பு

வாணியம்பாடி செட்டியப்பனூர் மேம்பாலத்தில் கார் மீது லாரி மோதிய விபத்தில் மூதாட்டி உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த 7 பேர் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Published on

செய்தியாளர்: ஆர்.இம்மானுவேல் பிரசன்னகுமார்

கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி பகுதியைச் சேர்ந்த காமாட்சியம்மாள் (76), தனது குடும்பத்தினர் மற்றும் பேரப்பிள்ளைகளுடன் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் உள்ள குலதெய்வ கோயிலுக்கு காரில் சென்றுள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி செட்டியப்பனூரிலுள்ள பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் மீது கார் வந்த போது, எதிரே வந்த லாரி திடீரென காரின் பக்கவாட்டில் மோதியுள்ளது.

Car accident
Car accidentpt desk

இதில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மூதாட்டி காமாட்சியம்மாள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். காரில் பயணம் செய்த மேலும் 7 பேர் படுகாயமடைந்த நிலையில், வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Road accident
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு | ”காவல்துறை என்னை விசாரிக்கவில்லை” - இயக்குநர் நெல்சன் சொன்ன விளக்கம்!

குலதெய்வ கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றபோது நடந்த விபத்தில் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com