வாணியம்பாடி: ரயில் படியின் அருகே நின்று பயணம் செய்த பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்

வாணியம்பாடி: ரயில் படியின் அருகே நின்று பயணம் செய்த பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்

வாணியம்பாடி: ரயில் படியின் அருகே நின்று பயணம் செய்த பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்
Published on

வாணியம்பாடி அருகே ஓடும் விரைவு ரயிலில் இருந்து தவறி விழுந்து பெண் உயிரிழப்பு ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே வக்கணம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் உமா. இவர், ரயில்களில் செல்போன் ஹெட்செட் வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சென்னையிலிருந்து - கேரள மாநிலம் திருவனந்தபுரம் வரை செல்லும் விரைவு ரயிலில் ஏறி பயணிகளிடம் வியாபாரம் செய்துள்ளார்.

இந்நிலையில், வியாபாரத்தை முடித்துவிட்டு ரயில் படிக்கட்டு அருகே நின்று கொண்டு வந்துள்ளார் அப்போது வாணியம்பாடி அருகே திடீரென கால் தவறி ஓடும் ரயில் இருந்து கீழே விழுந்த அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து சடலத்தை கைப்பற்றிய ஜோலார்பேட்டை ரயில்வே காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com