\
வாணியம்பாடி: லாரி மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து – ஓட்டுநர் பலி

வாணியம்பாடி: லாரி மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து – ஓட்டுநர் பலி

வாணியம்பாடி: லாரி மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து – ஓட்டுநர் பலி
Published on

வாணியம்பாடி அருகே கனரக வாகனம் மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நெக்குந்தி சுங்கச்சாவடி அருகே உள்ள மேம்பாலத்தின் மீது பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி ஆம்னி பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தனசேகர் என்பவர் ஓட்டி வந்துள்ளார்.

இந்நிலையில் மேம்பாலத்தின் மீது கற்கள் ஏற்றிச் சென்ற கனரக வாகனம் திடீரென பழுதானதால் பின்னால் வந்த ஆம்னி பேருந்து கனரக வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், ஆம்னி பேருந்து ஓட்டுநர் தனசேகர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். பேருந்தில் இருந்த 12 பேர் பலத்த காயங்களுடன் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

துகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வாணியம்பாடி கிராமிய காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com