ஒப்பந்த பணியாளர் உயிரிழப்பு
ஒப்பந்த பணியாளர் உயிரிழப்புpt desk

வாணியம்பாடி | நொடிப்பொழுதில் விபத்து.. அரசுப் பேருந்து மோதி சாலை பராமரிப்பு ஒப்பந்த பணியாளர் பலி!

வாணியம்பாடி அருகே தேசிய நெடுஞ்சாலை பணியில் ஈடுப்பட்டிருந்த ஒப்பந்த பணியாளர் அரசு பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..
Published on

செய்தியாளர்: ஆர்.இம்மானுவேல் பிரசன்னகுமார்

திருப்பத்தூர் அடுத்த அச்சமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ஹரி (27). இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், ஹரி சாலை பராமரிப்பு ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், ஹரி இன்று வாணியம்பாடி அடுத்த புத்துக்கோவில் பகுதியில் உள்ள பெங்களுார் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலை பராமரிப்பு பணியில் ஈடுப்பட்டிருந்தார்.

ஒப்பந்த பணியாளர்கள்
ஒப்பந்த பணியாளர்கள்pt desk

அப்போது, ஓசூரிலிருந்து, சென்னை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து, ஹரி மீது மோதியுள்ளது, இதில் நிலைதடுமாறி சாலையில் விழுந்த ஹரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அம்பலூர் காவல்துறையினர் ஹரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஒப்பந்த பணியாளர் உயிரிழப்பு
”கேரவன்களில் ரகசிய கேமரா” - மலையாள திரையுலகில் பாலியல் தொல்லை- ராதிகாவிடமும் வாக்குமூலம் பெற முடிவு?

இதையடுத்து அரசு பேருந்தை சிறைபிடித்த போலீசார், இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com