\
தண்டவாளத்தை கடக்க முயன்ற மூதாட்டிக்கு நேர்ந்த பரிதாபம்

தண்டவாளத்தை கடக்க முயன்ற மூதாட்டிக்கு நேர்ந்த பரிதாபம்

தண்டவாளத்தை கடக்க முயன்ற மூதாட்டிக்கு நேர்ந்த பரிதாபம்
Published on

வாணியம்பாடியில் ரயில்வே கேட் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற மூதாட்டி மீது ரயில் மோதி உயிரிழப்பு ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நூருல்லாபேட்டை பகுதியைச் சேர்ந்த மூதாட்டி மகாலட்சுமி (80) இவர், தனது உறவினர் வீட்டிற்குச் செல்ல ரயில்வே கேட்டை கடக்க முயன்றுள்ளார். அப்போது காட்பாடியில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி சோதனை ஓட்டத்திற்காக சென்ற ரயில் மூதாட்டி மகாலட்சுமி மீது மோதியது.

இதில், மூதாட்டி மகாலட்சுமி தூக்கி வீசப்பட்டு உடல் சிதைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வந்து சடலத்தை கைப்பற்றி ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com