\
வாணியம்பாடி: கார் மோதிய விபத்தில் சாலையை கடக்க முயன்ற தரகர் உயிரிழப்பு

வாணியம்பாடி: கார் மோதிய விபத்தில் சாலையை கடக்க முயன்ற தரகர் உயிரிழப்பு

வாணியம்பாடி: கார் மோதிய விபத்தில் சாலையை கடக்க முயன்ற தரகர் உயிரிழப்பு
Published on

வாணியம்பாடி அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற தரகர் மீது கார்மோதியதில் உயிரிழந்தார். 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த செட்டியப்பனுர் அடிகளார் நகர் பகுதியைச் சேர்ந்த வீட்டு தரகர் புருசோத் (50). இவர், திருமணம் செய்து கொள்ளாமல் அதே பகுதியில் உள்ள தன் தங்கை புஷ்பா என்பவர் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர், எதிர் சாலையில் இருந்து தன் தங்கை வீட்டிற்குச் செல்வதற்காக சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றுள்ளார்.

அப்போது சென்னையில் இருந்து பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்த கார் எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com