Vande Mataram Row on BJP Vs Vijay
விஜய்புதிய தலைமுறை

மேற்கு வங்கத்தில் NO.. தமிழகத்தில் முதன்மை.. ’வந்தே மாதரம்’ பாடலால் எழுந்த சர்ச்சை!

இன்றைய நிகழ்ச்சியில், ஒரே மேடையைப் பகிர்ந்துகொண்ட ராகுல் காந்தி மற்றும் விஜய் ஆகியோர் முன்னிலையில், தேசிய கீதத்திற்கு முன்பாக 'வந்தே மாதரம்' பாடல் பாடப்பட்டது.
Published on

வந்தே மாதரம் பாடல் தொடர்பாக நரேந்திர மோடி அரசு கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்ட வழிகாட்டுதல், எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி, ஒரு பெரும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இன்று தமிழக முதலமைச்சர் பதவியேற்பு விழா நிகழ்ச்சியில், ஒரே மேடையைப் பகிர்ந்துகொண்ட ராகுல் காந்தி மற்றும் விஜய் ஆகியோர் முன்னிலையில், தேசிய கீதத்திற்கு முன்பாக 'வந்தே மாதரம்' பாடல் பாடப்பட்டது.

ஜனவரி 28 தேதியிட்ட மத்திய உள்துறை அமைச்சகத்தின் (MHA) வழிகாட்டுதல், அசல் 'வந்தே மாதரம்' பாடலின் ஒரு பகுதியாக அமைந்திருந்த ஆறு சரணங்கள் முழுவதையும் அரசு நிகழ்ச்சிகளில் பாட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தது. முன்னதாக, இந்திய தேசிய காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் வந்தே மாதரம் தொடர்பான மத்திய அரசின் நடவடிக்கையை அப்போது கடுமையாக விமர்சித்திருந்தது. எனினும், மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலுக்கு இணங்க, விஜயின் இன்றைய பதவியேற்பு விழாவில் தேசிய கீதத்திற்கு முன்னதாக அப்பாடல் முழுமையாக இசைக்கப்பட்டது.

Modi & Suvendu Adhikari
Modi & Suvendu Adhikari web

ஆனால், 1882-ஆம் ஆண்டில் புகழ்பெற்ற வங்காள எழுத்தாளர் பங்கிம் சந்திர சட்டர்ஜியால் இயற்றப்பட்ட இந்தப் பாடல், சனிக்கிழமையன்று நடைபெற்ற மேற்கு வங்க பாஜக முதலமைச்சரின் பதவியேற்பு விழாவில் இசைக்கப்படவில்லை; கொல்கத்தாவின் 'பிரிகேட் அணிவகுப்பு மைதானத்தில்' நடைபெற்ற அவ்விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பல மத்திய அமைச்சர்கள் கலந்துகொண்டிருந்தனர். அதேநேரத்தில், தமிழக முதல்வர் பதவியேற்பு விழாவில் இந்தப் பாடல் தேசிய கீதம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்பாகவே பாடப்பட்டது. 'வந்தே மாதரம்' பாடப்பட வேண்டும் என்பது குறித்த மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஓர் ஆணை நடைமுறையில் உள்ள நிலையில், அதை அமல்படுத்திய பாஜக அரசே, தன் ஆட்சி விழாவில் பாடாமல் விட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Vande Mataram Row on BJP Vs Vijay
“யாரும் ஆட்டம் ஆடுவோம்னு நினைச்சா..” - முதல்வரான பின்பு முதல் உரையாற்றிய விஜய்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com