தமிழ்நாடு
கட்டாயமானது வந்தே மாதரம்: உயர்நீதிமன்றம் அதிரடி
கட்டாயமானது வந்தே மாதரம்: உயர்நீதிமன்றம் அதிரடி
தமிழக பள்ளி, கல்லூரிகளில் வந்தே மாதரம் பாடலை கட்டாயம் பாட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பள்ளி மற்றும் கல்லூரிகளில் திங்கள் அல்லது வெள்ளியன்று வாரம் ஒருமுறையாவது கட்டாயம் வந்தே மாதரம் பாடலை பாட வேண்டும். அதே போல், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களிலும் மாதம் ஒரு முறை வந்தே மாதரம் பாடலை இசைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதேசமயம் வந்தே மாதரம் பாடலை பாட விருப்பம் இல்லாதவர்களை பாடுமாறு அழுத்தம் கொடுக்கக்கூடாது என்றும் விருப்பமில்லாதவர்களை பாடுமாறு அழுத்தம் கொடுத்தால் அவர்களுக்கு நாட்டின் மீது வெறுப்பு அதிகரிக்கும் என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.