வந்தவாசி: துக்க நிகழ்ச்சிக்கு வந்த இடத்தில் கிணற்றில் தவறிவிழுந்து உயிரிழந்த மாணவன்

வந்தவாசி: துக்க நிகழ்ச்சிக்கு வந்த இடத்தில் கிணற்றில் தவறிவிழுந்து உயிரிழந்த மாணவன்
வந்தவாசி: துக்க நிகழ்ச்சிக்கு வந்த இடத்தில் கிணற்றில் தவறிவிழுந்து உயிரிழந்த மாணவன்

வந்தவாசி அருகே தனியார் பள்ளி மாணவன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை மாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் முனியப்பராஜ். கட்டட மேஸ்திரியாக வேலை செய்து வரும் இவர், தனது உறவினரின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்தவாசியை அடுத்த சோகத்தூர் கிராமத்திற்கு வந்த நிலையில், இன்று காலையில் முனியப்பராஜின் மனைவி தீபா, மகன் சரண் மற்றும் உறவினர்கள் ஆகியோர் துணி துவைப்பதற்காக நாவல்பாக்கம் கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றிற்கு சென்றுள்ளனர்.

அப்போது சென்னை மாங்காடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் முனியப்பராஜின் மகன் சரண், விவசாய கிணற்றில் தவறி விழுந்துள்ளார். அருகில் விவசாய பணி செய்தவர்கள் உடனடியாக காப்பாற்ற முயன்றும் முடியாத நிலையில், வந்தவாசி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், இரண்டு மணிநேரம் போராடி கிணற்றில் இருந்து மாணவனை சடலமாக மீட்டனர். இதையடுத்து தகவல் அறிந்த  போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். வந்தவாசி அருகே பள்ளி மாணவன் கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com