`இந்த கருவி இருந்தா... சாலை விபத்துகளை தடுக்கலாம் சார்’- கண்காட்சியில் அசத்திய மாணவர்கள்!

`இந்த கருவி இருந்தா... சாலை விபத்துகளை தடுக்கலாம் சார்’- கண்காட்சியில் அசத்திய மாணவர்கள்!
`இந்த கருவி இருந்தா... சாலை விபத்துகளை தடுக்கலாம் சார்’- கண்காட்சியில் அசத்திய மாணவர்கள்!

வந்தவாசியில் பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் கண்டுபிடிப்புகளை காட்சிபடுத்தும் கண்காட்சியில், `வெப்பநிலைக்கு தகுந்தார் போல் இயங்கும் கருவி’ மற்றும் `விபத்து ஏற்படாமல் இருக்க சென்சார் மூலம் வாகனத்தை நிறுத்தும் கருவிகள்’ முதலியவற்றை கண்டுபிடித்து மாணவர்கள் அசத்தியுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் தனியார் மெட்ரிக் பள்ளி சார்பில் இன்று அறிவியல் கண்காட்சி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களின் செயல் திறன் படைப்புகள் மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன. பள்ளி மாணவர்களின் படைப்புகளை இடைநிலை மாவட்ட கல்வி அலுவலர் எல்லப்பன் நேரில் பார்வையிட்டு வாழ்த்துகளை தெரிவித்தார்.

நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில், விபத்து ஏற்படாமல் இருக்க வெப்பநிலைக்கு தகுந்தார் போல இயங்கும் கருவி, சென்சார் மூலம் வாகனத்தை நிறுத்தும் கண்டுபிடிப்பு மற்றும் டோர் அன்லாக் செய்யும் கண்டுபிடிப்பு, பிளாஸ்டிக் தீமைகள், கம்யூட்டர் கிராப்பிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு மாணவர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகள் காட்சிபடுத்தபட்டது.

சிறப்பம்சமாக சாலையில் செல்லும் வாகனங்களை விபத்து ஏற்படாமல் தடுக்கும் கண்டுபிடிப்புகள், கதவுகளில் சென்சார் பொருத்தப்பட்டு செல்போன் மூலம் தானாக அன்லாக் செய்யும் கருவி முதலியவை பெரிதும் கவனம் ஈர்த்தன.

மேலும் இன்குபேட்டரில் வைக்கப்படும் குழந்தை முதற்கொண்டு, அடைகாக்கும் முட்டை - அமைக்கப்படும் கோழி மற்றும் மாட்டு பண்ணைகள் வரை பாதுகாப்பான முறையில் வெப்பநிலையை பராமரிக்கும் கருவி, பிளாஸ்டிக் தீமைகள் குறித்த செயல்திறன்கள், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பற்றிய கண்டுபிடிப்புகள் உள்ளிட்ட பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்புகளை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் வெகுவாக பாராட்டினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com