வண்டலூர் போகனுமா ஆஃப்ல டிக்கெட்ட புக் பண்ணுங்க !
வண்டலூர் பூங்கா செல்லும் சுற்றுலா பயணிகள் எளிதாக சென்று வரும் வகையில் முன்பதிவு செய்யும் வசதியுடன் கூடிய ‘செயலி’ உருவாக்கப்பட்டுள்ளது.
அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 2300 விலங்கினங்கள் இருகின்றன. தமிழ்நாட்டில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான ‘வண்டலூர் பூங்கா’வில் ஆண்டு தோறும் இந்திய மற்றும் உலக அளவிலிருந்து சுமார் 20 லட்சம் பார்வையாளர்கள் வந்து போகின்றனர். அதில் இப்போது பார்வையாளர்களின் வசதிக்காக பூங்கா நிர்வாகம் கைபேசி செயலி “ vandalur zoo " என்ற பெயரில் ஆண்ட்ராய்டு கைபேசியின் மூலம் உபயோகப்படுத்தும் வண்ணம் அறிமுகப்படுத்தி உள்ளது. அந்த ஆண்ட்ராய்டு மூலம் பூங்கா நுழைவுக்கான டிக்கெட்டை முன் பதிவு செய்யவும், பூங்காவில் சுலபமாக செல்ல பூங்கா வரைப்படத்துடன் விலங்கு இருப்பிடங்களின் தகவல்களுடன் கொடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் பூங்காவினுள் காணப்படும் பாலூட்டிகள் ஊர்வன மற்றும் பறவைகள் குறித்து தகவலமைப்புகள் வழங்கபடுவதுடன் அவைகளுக்கு ஒலி விளக்கவுரை வசதியும், பூங்கா நிகழ்வுகள் மற்றும் விளையாட்டு தொடர்பாக செயலியில் தனி பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கைப்பேசி செயலியானது கலந்துரையாடக்கூடிய வகையிலும், பூங்கா நுழைந்த இடத்தில் இருந்து தொடங்கி ஒவ்வொரு விலங்கின இருப்பிடத்திற்கும் ஓய்வு அறை, உணவு விடுதி , கழிப்பறை போன்ற இடங்களுக்கு செல்ல என அனைத்து விவரங்களையும் அச்செயலி வழங்குகிறது.