தமிழ்நாடு
காணும் பொங்கலுக்கு வண்டலூர் பூங்கா போக முடியாது
காணும் பொங்கலுக்கு வண்டலூர் பூங்கா போக முடியாது
காணும் பொங்கல் பண்டிகைக்கு வண்டலூர் உயிரியல் பூங்கா திறக்கப்படாது என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வர்தா புயலால் வண்டலூர் பூங்காவில் அதிக மரங்கள் விழுந்து சேதமடைந்தன. பூங்காவிற்குள் வெட்டப்பட்ட மரங்களும் காய்ந்த சருகுகளும் இருப்பதால் தீவிபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறையினர் பூங்காவை பார்வையிட்டபோது தெரிவித்தனர். மரங்கள், சருகுகளை முழுமையாக அகற்றி கட்டமைப்பு வசதிகள் சரிசெய்யப்பட்ட பின்னரே பூங்கா திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வருடந்தோறும் காணும் பொங்கலுக்கு ஏராளமானோர் வண்டலூர் பூங்காவுக்குச் செல்வார்கள். வர்தா தந்த பாதிப்பால் இந்த ஆண்டு அதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது.