\
வள்ளியூர் கோர்ட்டில் கமல்ஹாசன் ஆஜராக உத்தரவு

வள்ளியூர் கோர்ட்டில் கமல்ஹாசன் ஆஜராக உத்தரவு

வள்ளியூர் கோர்ட்டில் கமல்ஹாசன் ஆஜராக உத்தரவு
Published on

மகாபாரதத்தை இழிவுபடுத்தி பேசியதாக நடிகர் கமல்ஹாசன் மீது தொடரப்பட்ட வழக்கில் அவர் நேரில்ஆஜராக வள்ளியூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் கமல்ஹாசன், கடந்த சில நாட்களுக்கு முன், புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அதில் மகாபாரதத்தையும், இந்துக்களின் கலாசாரத்தையும் கொச்சைப்படுத்தும் விதமாக பேசியதாக, இந்து அமைப்புகள் புகார் கூறின. திருநெல்வேலி மாவட்டம் பழவூரை சேர்ந்தவரும், அங்குள்ள நாறும்பூநாதசுவாமி கோயில் பக்தர்கள் நலச்சங்க செயலாளருமான வை.ஆதிநாதசுந்தரம் என்பவர் கமல்ஹாசன் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி, வள்ளியூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரித்த நீதிபதி கமல்ஹாசன் நேரில் ஆஜராக உத்தரவிட்டார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com