காதலர் தினத்தை ஒட்டி தேக்கடியில் குவிந்த காதல் ஜோடிகள்!

காதலர் தினத்தை ஒட்டி தேக்கடியில் குவிந்த காதல் ஜோடிகள்!

காதலர் தினத்தை ஒட்டி தேக்கடியில் குவிந்த காதல் ஜோடிகள்!
Published on

காதலர் தினத்தை ஒட்டி சுற்றுலா தளமான தேக்கடியில் காதல் ஜோடிகள் வருகை அதிகமாக இருந்தது. 

உலகம் முழுவதும் இன்று காதலர்கள் தினம் கொண்டாடப்பட்டது. தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் காதலர் தினம்
கொண்டாடப்பட்டது. இதையொட்டி சுற்றுலாத் தளங்கள், பூங்காக்கள், திரையரங்குகள் உள்ளிட்டவையும் கூட்டமாக காணப்பட்டன.
அதன்படியே, கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தளமான தேக்கடியிலும் ஏராளமான காதல் ஜோடிகள்
குவிந்தனர். இதையடுத்து காதலர் தின எதிர்ப்பாளர்களால் அசம்பாவிதம் எதுவும் நிகழாமல் இருக்க, அங்கு புலிகள் காப்பக
வனத்துறையினர் மற்றும் கேரளா சுற்றுலாப் போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்களின் பாதுகாப்புடன் காதல்
ஜோடிகள் படகு சவாரியும் செய்து மகிழ்ந்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com