மிரட்டல் கால்களால்..எம்எல்ஏக்கள் ஃபோன் ஸ்விட்ச் ஆஃப்: வளர்மதி விளக்கம்
பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு அளிக்கும்படி, எம்.எல்.ஏ.,க்களுக்கு தொலைபேசியில் தொடர்ந்து மிரட்டல் வருவதால் அவர்கள் ஃபோனை ஸ்விட்ச் ஆஃப் செய்துள்ளனர் என அமைச்சர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஓ.பன்னீர்செல்வம் தாக்கப்பட்டு ராஜினாமா கடிதத்தில் கையெழுத்துப் பெற்றதாக தமிழக பாரதீய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறுவது முற்றிலும் பொய். அதனை நாங்கள் மாறுக்கிறோம் என வளர்மதி கூறினார்.
சசிகலா முதலமைச்சராக வர வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் உட்பட அனைவரும் ஆதரவு கடிதம் கொடுத்தனர். அதிமுக எம்.எல்.ஏ.,க்களை யாரும் கடத்தவில்லை. அதிமுகவினர் அனைவரும் ஒற்றுமையாக உள்ளனர். அவர்களுக்கெல்லாம் தொலைபேசியில் மிரட்டல் செல்கிறது. ஆகவேதான் அவர்கள் செல்போனை ஆஃப் செய்து வைத்து சுதந்திரமாக உள்ளனர் என்றும் வளர்மதி கூறியுள்ளார்.

