வைரமுத்து மன்னிப்பு கேட்காவிட்டால் சாகும்வரை போராட்டம்: சடகோப ராமானுஜ ஜீயர்

வைரமுத்து மன்னிப்பு கேட்காவிட்டால் சாகும்வரை போராட்டம்: சடகோப ராமானுஜ ஜீயர்
வைரமுத்து மன்னிப்பு கேட்காவிட்டால் சாகும்வரை போராட்டம்: சடகோப ராமானுஜ ஜீயர்

கவிஞர் வைரமுத்து பிப்ரவரி 3-ம் தேதிக்குள் மன்னிப்பு கேட்காவிட்டால் மீண்டும் போராட்டம் நடைபெறும் என்று சடகோப ராமானுஜ ஜீயர் கூறியுள்ளார். 

தினசரி நாளிதழ் ஒன்று ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் ஆண்டாள் குறித்து வைரமுத்து சில ஆய்வறிக்கைகளை மேற்கொள் காட்டி பேசினார். அப்போது ஆண்டாள் தேவதாசி குலத்தைச் சேர்ந்தவர் என்று வைரமுத்து சுட்டிக்காட்டி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஆண்டாளை தவறாக சித்தரிக்கும் விதமாக வைரமுத்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. முதலில் தன்னுடைய கருத்து யாருடைய மனதையும் புண்படுத்தி இருந்தால் வருத்தம் தெரிவிப்பதாக வைரமுத்து கூறியிருந்தார். இருப்பினும், வைரமுத்துவுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்தன. 

இதனால், ஆண்டாள் சர்ச்சை குறித்து விளக்கம் அளித்து நேற்று வீடியோ பதிவு ஒன்றினை வைரமுத்து வெளியிட்டார். அதில் ஆண்டாளை தாயாக நினைப்பதாகவும், சிலர் தன்னுடைய கருத்தை திரித்து வேண்டுமென்றே கலவரத்தை தூண்டும் வகையில் பேசி வருவதாக குற்றம்சாட்டி இருந்தார். வைரமுத்துவின் இந்த விளக்கத்தால் ஆண்டாள் குறித்த சர்ச்சை முடிவுக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், அதன் பிறகும் தொடர்கிறது.

சென்னை பெசன்ட் நகரில் இருக்கும் அவருடையவீட்டை முற்றுகையிட போவதாக இந்து மகாசபை இன்று அறிவித்தது, இதையடுத்து அவரது வீட்டிற்கு முன் 50க்கும் மேற்பட்ட போலீஸார் தற்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், வைரமுத்து மன்னிப்பு கேட்காவிட்டால் மீண்டும் போராட்டம் நடைபெறும் என்று சடகோப ராமானுஜ ஜீயர் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், “ஆண்டாளை தாயாக நினைத்தால் ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலுக்கு வந்து மன்னிப்புக் கேட்க வேண்டும்; வைரமுத்து மன்னிப்புக் கேட்க பிப்.3 வரை காலக்கெடு கொடுத்துள்ளோம், இல்லையெனில் போராட்டம்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com