புகழஞ்சலி: "கி.ரா தமிழில் வாழ்வார்" - கவிஞர் வைரமுத்து

புகழஞ்சலி: "கி.ரா தமிழில் வாழ்வார்" - கவிஞர் வைரமுத்து
புகழஞ்சலி: "கி.ரா தமிழில் வாழ்வார்" - கவிஞர் வைரமுத்து

எழுத்தாளர் கி.ரா.வின் மறைவுக்கு, சமூக ஊடகம் வழியாக புகழஞ்சலி செலுத்தியிருக்கும் கவிஞர் வைரமுத்து, கி.ரா.வின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவித்ததற்கு முதல்வருக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.

கி.ரா. என அழைக்கப்படும் பிரபல எழுத்தாளர் கி.ராஜாநாராயணன் உடல் நலக்குறைவு, வயது முதிர்வு காரணமாக காலமானார். அவருக்கு வயது 99. 'கரிசல் இலக்கியத்தின் தந்தை' என்றழைக்கப்பட்ட கி.ரா. என்னும் கரிசல்காட்டுப்பூ உதிர்ந்துவிட்டாலும் அவரது எழுத்துகள் என்றென்றும் மணம்வீசிக்கொண்டே இருக்கும்.

இதுபற்றி வைரமுத்து வெளியிட்டிருக்கும் ட்வீட்டில்  

‘கி.ரா

வட்டார மொழி இலக்கியத்தின்

ஆதி ஊற்று. 

அவரது மறைவால்

இலக்கிய நதிகளில் கண்ணீர் ஓடுகிறது. 

அவர் மறைவுக்கு

அரசு மரியாதை அறிவித்திருக்கும்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி. 

அரசு அவருக்கு எதிர்காலத்தில்

நினைவுமண்டபம் எழுப்பும்

என்று நம்புகிறோம்.

கி.ரா தமிழில் வாழ்வார்’

என்று குறிப்பிட்டுள்ளார். உடன் தனது புகழஞ்சலியை காணொளி வாயிலாகவும் வெளியிட்டிருக்கிறார் அவர். அதில் "கி.ரா. பள்ளிக்கூடம் பக்கமே போகாதவர். ஆனால் பல்கலைக்கழகத்துக்கே பேராசிரியராக இருந்திருக்கிறார். எழுத்துக்கும் படிப்புக்கும் தொடர்பில்லை என நிரூபித்தவர்" எனக்கூறியுள்ளார் அவர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com