\
தமிழில் பதவியேற்ற எம்பிக்களுக்கு வைரமுத்து வாழ்த்து

தமிழில் பதவியேற்ற எம்பிக்களுக்கு வைரமுத்து வாழ்த்து

தமிழில் பதவியேற்ற எம்பிக்களுக்கு வைரமுத்து வாழ்த்து
Published on

மக்களவையில் தமிழில் பதவியேற்ற தமிழ்நாட்டு எம்பிக்களுக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.  

17ஆவது மக்களவையில் தமிழ்நாட்டிலிருந்து தேர்வான எம்பிக்கள் இன்று பதவியேற்றனர். அப்போது அவர்கள் அனைவரும் தங்களின் பதவி பிரமாணத்தை தமிழில் எடுத்துக்கொண்டனர். மேலும் பதவி பிரமாணத்தின் இறுதியில் அவர்கள் ‘தமிழ் வாழ்க’ என்ற முழக்கத்தையும் விடுத்தனர். இதனையடுத்து சமூக வலைத்தளங்களில் ‘தமிழ் வாழ்க’ என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. 

இந்நிலையில் தமிழில் பதவியேற்ற எம்பிக்களுக்கு வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “நாடாளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி ஏற்ற தங்கங்களை வாழ்த்துகிறேன். நாம் எந்த மொழியையும் எதிர்க்கப் பிறந்தவர்கள் இல்லை. சொந்த மொழியைக் காக்கப் பிறந்தவர்கள். அத்துடன் தமிழ் மொழியை காக்கவும்  தமிழையும் ஆட்சிமொழி ஆக்கவும் பயணிப்போம்” என்று பதிவிட்டுள்ளார். 

முன்னதாக நேற்று தமிழ்நாடு எம்பிக்கள் அனைவரும் தமிழில் பதவியேற்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ரவிக்குமார் கோரிக்கை விடுத்தார். இந்தச் சூழலில் தமிழ்நாடு எம்பிக்கள் அனைவரும் தமிழில் பதவியேற்றது நாடாளுமன்றத்தில் தமிழை ஓங்கி ஒலிக்க செய்துள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com