\
லஞ்சம் கொடுத்த வழக்கு:வைகுண்ட ராஜனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

லஞ்சம் கொடுத்த வழக்கு:வைகுண்ட ராஜனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

லஞ்சம் கொடுத்த வழக்கு:வைகுண்ட ராஜனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை
Published on

சுற்றுச்சூழல் அனுமதி பெற லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் விவி மினரல்ஸ் நிறுவன உரிமையாளர் வைகுண்ட ராஜனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்த வழக்கில் மத்திய சுற்றுச்சூழல் அதிகாரி நீரஜ் கட்ரி, வைகுண்டராஜன் உள்ளிட்டோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். வழக்கு விசாரணை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதில், வைகுண்டராஜனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், 5 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அரசு அதிகாரி நீரஜ் கட்ரிக்கு 5 ஆண்டு சிறை, 5 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், விவி மினரல்ஸ் ஊழியர் சுப்புலட்சுமிக்கு 3 ஆண்டுகள் சிறை, 2 லட்சம் ரூபாய் அபராதமும், விவி மினரல்ஸ் நிறுவனத்துக்கு 10 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பிணை தொகை செலுத்தி வைகுண்ட ராஜன் ஜாமீன் பெற்றுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com