ஐ.நா மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில் பங்கேற்க, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஜெனீவாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
இலங்கையில் மனித உரிமை மீறப்பட்டதா என்பது குறித்து ஐ.நா விசாரணை மேற்கொண்டது. இதற்கான இடைக்கால அறிக்கை ஏற்கனவே ஐ.நா மன்றத்தில் சமர்பிக்கப்பட்டது. தற்போது விசாரணையின் முழு அறிக்கை ஜெனிவா கூட்டத்தில் சமர்பிக்கப்படுகிறது. இதில் 10 நாட்கள் பங்கேற்க, வைகோ சென்னையில் இருந்து சென்றுள்ளார்.
இலங்கையில் 2009 ம் ஆண்டு நடைபெற்ற போரின் இறுதிக் கட்டம், இலங்கை அரசிடம் சரணடைந்தவர்கள் விவரம், போருக்கு பின் தமிழர்கள் பாதுகாப்பு, தமிழர்களின் தற்போதைய நெருக்கடி சூழல் குறித்து அறிக்கையில் தெரிவிக்கப்படும் என தெரிகிறது.