ராஜீவ்காந்தி வழக்கு: '30 வருடங்களுக்குப் பிறகு 7 பேருக்கும் விமோசனம்' -வைகோ மகிழ்ச்சி

ராஜீவ்காந்தி வழக்கு: '30 வருடங்களுக்குப் பிறகு 7 பேருக்கும் விமோசனம்' -வைகோ மகிழ்ச்சி
ராஜீவ்காந்தி வழக்கு: '30 வருடங்களுக்குப் பிறகு 7 பேருக்கும் விமோசனம்' -வைகோ மகிழ்ச்சி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் எஞ்சிய 6 பேரையும் விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்ட நிலையில், தங்களையும் விடுதலை செய்ய வேண்டும் என நளினி உள்ளிட்ட எஞ்சிய 6 பேரும் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இம்மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், நளினி உள்பட 6 பேரும் தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி, முருகன், சாந்தன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 6 பேரையும் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் எஞ்சிய 6 பேரையும் விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

30 ஆண்டுகளுக்கு மேலான சிறைவாசம், நன்னடத்தை, பரோல் கால செயல்பாடுகள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து உச்ச நீதிமன்றம் தமக்கான சிறப்பு அதிகாரம் வழங்கும் அரசியல் சாசனத்தின் 142- வது பிரிவின் கீழ் பேரறிவாளனை விடுதலை செய்தது. அதே அதிகாரத்தை கொண்டு நளினி உள்பட 6 பேரையும் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, 30 ஆண்டுகளுக்கு பிறகு 7 பேருக்கும் விமோசனம் பிறந்துள்ளது என  தெரிவித்துள்ளார். மனசாட்சி, மனிதாபிமானமற்றவர் ஆளுநர் ஆர்.என்.ரவி என்று வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com