“மனு ஏற்கப்படும் என மனதிற்குள் நம்பிக்கை இருந்தது” - வைகோ உருக்கம்

“மனு ஏற்கப்படும் என மனதிற்குள் நம்பிக்கை இருந்தது” - வைகோ உருக்கம்

“மனு ஏற்கப்படும் என மனதிற்குள் நம்பிக்கை இருந்தது” - வைகோ உருக்கம்
Published on

தனது மாநிலங்களவை வேட்புமனு ஏற்கப்படும் என நம்பிக்கை இருந்ததாக வைகோ உருக்கமாக தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவைத் தேர்தலுக்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தாக்கல் செய்த மனு ஏற்கப்பட்டுள்ளது. மனு ஏற்கப்பட்டது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “நான் போட்டியிடுவதால் மதிமுகவில் யாரும் அதிருப்தியில் இல்லை. மதிமுகவில் பதவி பெற்றவர்கள் தான் கட்சியை விட்டு சென்றனர். மத்திய அமைச்சர் பதவி இருமுறை வந்தபோதும் அதை ஏற்க நான் மறுத்தேன். என் குடும்பத்தில் இருந்து யாரும் பதவிக்கு வரமாட்டார்கள். மதிமுக தொண்டர்களுக்காகவே நான் வாழ்கிறேன்” என்றார்.

கடந்த வாரம் அவருக்கு தேசத்துரோக வழக்கில் ஓராண்டு சிறை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் வழங்கப்பட்டது. ஆனால் இந்த தண்டனை ஒரு மாதம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே திமுக சார்பில் வழங்கப்பட்ட வாய்ப்பின் அடிப்படையில் வைகோ மாநிலங்களவைக்கான வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனு ஏற்கப்படுமா ? என்ற சந்தேகம் இருந்த நிலையில், மனு ஏற்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com