\
தா.பாண்டியனிடம் வைகோ நலம் விசாரிப்பு

தா.பாண்டியனிடம் வைகோ நலம் விசாரிப்பு

தா.பாண்டியனிடம் வைகோ நலம் விசாரிப்பு
Published on: 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் தா.பாண்டியனை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

சிறுநீரக பிரச்னை காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொ‌து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தா.பாண்டியனின் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து தற்போது அவர் பொது மருத்துவ பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்நிலையில் மதிமுக‌ பொதுச் செயலாளர் வைகோ, சிகிச்சை பெற்று வரும் தா.பாண்டியனை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தா.பாண்டியன் பூரண உடல் நலம் பெற்று பொதுவாழ்வில் தனது பயணத்தை தொடர வேண்டும் என விருப்பம் தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com