\
அலட்சியப்போக்கு நல்லதல்ல: வைகோ

அலட்சியப்போக்கு நல்லதல்ல: வைகோ

அலட்சியப்போக்கு நல்லதல்ல: வைகோ
Published on

தேசத் துரோக வழக்கில் சிறையில் இருக்கும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அவரது சிறைக்காவலை வரும் 27ம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், எழும்பூர் நீதிமன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, விவசாயிகளை சந்தித்து அவர்களது கோரிக்கைகளை பிரதமர் ஏற்க வேண்டும். கர்நாடகாவிற்கு சாதகமாகவும் தமிழகத்திற்கு பாதகமாகவும் மத்திய அரசு செயல்படுகிறது. விவசாயிகள் பிரச்னையில் மத்திய அரசின் அலட்சியப்போக்கு நல்லதல்ல. ஹைட்ரோகார்பன் திட்டத்தை தமிழகத்தில் நிச்சயமாக வர விட மாட்டோம் என்று கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com