தமிழ்நாடு
ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகத்திற்கு ஆதாரம் உள்ளதா..? நீதிபதிக்கு வைகோ கேள்வி
ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகத்திற்கு ஆதாரம் உள்ளதா..? நீதிபதிக்கு வைகோ கேள்வி
ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக நீதிபதி வைத்தியநாதன் கூறியிருப்பது அதிர்ச்சியளிப்பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். சந்தேகம் எழக்கூடிய அளவுக்கு நீதிபதியிடம் ஆதாரம் எதுவும் உள்ளதா? என்றும் வைகோ வினவியிருக்கிறார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அவரது உடலை தோண்டி எடுத்து பரிசோதனை நடத்துவதற்கும் உத்தரவிடுவேன் என்றும் நீதிபதி வைத்தியநாதன் கூறியிருந்தார். இதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். எந்த ஆதாரத்தின் அடிப்படையில் அதனை வைத்தியநாதன் கூறினார் என்றும் வைகோ கேள்வியெழுப்பி இருக்கிறார்.