ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து மனிதச் சங்கிலி போராட்டம்

ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து மனிதச் சங்கிலி போராட்டம்
ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து மனிதச் சங்கிலி போராட்டம்

தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு கொடுத்த உரிமத்தை மத்திய அரசு ரத்து செய்யவேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் முதல் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் வரை மனித சங்கிலி போராட்டம் போராட்டம் நடைபெற்றது. இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் தொடங்கிய 'பேரிழப்பிற்கு எதிரான பேரியக்கம்' சார்பில் இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுக எம்எல்ஏ பொன்முடி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எம்பி ரவிக்குமார், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் கலந்துகொண்டனர். 

மேலும் தமிழ் அமைப்புகள், விவசாய சங்கத்தினர் என பல்வேறு தரப்பினர் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். சுமார் 600 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த மனித சங்கிலி போராட்டத்தில் மக்கள் பங்கேற்று தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தினர். நாகை, கடலூர், தஞ்சாவூர் அதிராமபட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கைகளை கோர்த்துநின்று அறப்போராட்டத்தில் பங்கேற்றனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் தமிழகத்தில் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படும் என அச்சம் என அவர் அச்சம் தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு கொடுத்த உரிமத்தை மத்திய அரசு ரத்து செய்யவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com