கந்துவட்டிக் கொடுமையை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்: வைகோ
கந்துவட்டி கொடுமையை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கந்துவட்டிக் கொடுமை குறித்து காவல்துறையினரிடம், பாதிப்படைந்தவர்கள் புகார் அளித்தால், புகார் அளிப்பவர்கள் மீதே காவல்துறை நடவடிக்கை எடுக்கிறது என்று குற்றம்சாட்டியுள்ளார். அத்துடன் நெல்லையில் ஒரு குடும்பமே கந்துவட்டிக் கொடுமையால் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வதற்கு காரணமான கந்துவட்டிக்காரர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதற்கு உடந்தையாக இருந்த காவல்துறையினரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் இந்த சம்பவத்தை தடுக்கத் தவறிய மாவட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த 2003ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட கந்துவட்டி தடுப்புச்சட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.