\
சசிகலா விரைவில் முதலமைச்சராக வருவார்: வைகைச் செல்வன்

சசிகலா விரைவில் முதலமைச்சராக வருவார்: வைகைச் செல்வன்

சசிகலா விரைவில் முதலமைச்சராக வருவார்: வைகைச் செல்வன்
Published on: 

ஆளுநரிடமிருந்து நல்ல தகவல் வரும் என்றும் சசிகலா விரைவில் முதலமைச்சராவார் எனவும் அதி‌முகவின் செய்தித்தொடர்பாளர் வைகைச் செல்வன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், அதிமுகவை உடைக்க திமுக சூழ்ச்சி வலைகளை பின்னி ஓ.பன்னீர்செல்வத்திற்கு பின்னால் இருந்து இயக்குகிறது. அதன்படி தான் ஓ.பன்னீர்செல்வம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அதிமுக எந்த சூழ்ச்சிக்கும் இரையாகாத ஒரு மகத்தான இயக்கம். அப்படிப்பட்ட இந்த இயக்கத்தை சிறப்பாக வழிநடத்தும் பொதுச் செயலாளர் சசிகலா மிக விரைவில் முதலமைச்சராக வருவார் என்று தெரிவித்தார். ஆட்சி அமைப்பதற்கான நல்ல தகவல் ஆளுநரிடமிருந்து மிக விரைவில் வரும் என நம்பிக்கை தெரிவித்த, வைகைச் செல்வன் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் அரசு விடுதியில் இருக்கிறார்கள் என்றும் அவர்கள் அனைவரும் சசிகலாவிற்கு ஆதரவு அளிக்கின்றனர் என்றும் கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com