\
விவசாயிகள் போராட்டத்தால் வைகை அணை திறப்பு

விவசாயிகள் போராட்டத்தால் வைகை அணை திறப்பு

விவசாயிகள் போராட்டத்தால் வைகை அணை திறப்பு
Published on

முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தபடி வைகை அணையிலிருந்து வினாடிக்கு 900 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

வைகை அணையிலிருந்து ஒருபோக சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என கூறிக் மதுரை மாவட்டம் மேலூர் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் நேற்று மதுரை-திருச்சி 4 வழிச் சாலையில் கிட்டத்தட்ட 5 மணி நேரத்திற்கு மேலாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து முழுமையாக ஸ்தம்பித்தது. தங்களுக்கு தண்ணீர் விடாமல் இந்த மறியல் போராட்டத்தை கைவிடமாட்டோம் என திட்டவட்டமாக அவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து வைகை அணையிலிருந்து வரும் 27-ம் தேதி வரை 7 நாள்களுக்கு தண்ணீர் திறக்கப்படுமென முதலமைச்சர் பழனிசாமி நேற்று அறிவித்திருந்தார்.

முதலமைச்சர் அறிவித்தபடி வைகை அணையிலிருந்து வினாடிக்கு 900 கன அடி வீதம் இன்று காலை முதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com