2 ஆண்டுகளுக்குப் பின் திறக்கப்பட்ட வைகை அணை

2 ஆண்டுகளுக்குப் பின் திறக்கப்பட்ட வைகை அணை

2 ஆண்டுகளுக்குப் பின் திறக்கப்பட்ட வைகை அணை
Published on

2 ஆண்டுகளுக்குப் பின் வைகை அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

துணை முத‌லமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணையை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, ஆர்பி உதயகுமார் ஆகிய அமைச்சர்கள் பங்கேற்றனர். 
2‌015ஆம் ஆண்டுக்குப் பிறகு வைகை அணை பாசனத்திற்காகத் திறக்கப்பட்டுள்ளது. கம்பம் பள்ளத்தாக்கு, பெரியாறு பிரதான கால்வாய்ப் பாசனப் பகுதியின் கீழ் முதல் போக பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு விநாடிக்கு 900 கன அடி வீதம் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வைகை அணை திறக்கப்பட்டுள்ளதன் மூலம் மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் 45,041 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com