பேக்கரியை அடித்து நொறுக்கிய விவகாரம்: திமுக பிரமுகர் கட்சியிலிருந்து தற்காலிக நீக்கம்

பேக்கரியை அடித்து நொறுக்கிய விவகாரம்: திமுக பிரமுகர் கட்சியிலிருந்து தற்காலிக நீக்கம்
பேக்கரியை அடித்து நொறுக்கிய விவகாரம்: திமுக பிரமுகர் கட்சியிலிருந்து தற்காலிக நீக்கம்

திமுகவுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக மதுரை வாடிப்பட்டியைச் சேர்ந்த அக்கட்சியின் நிர்வாகி பிரகாசம் அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மதுரை வாடிப்பட்டியில் அதிமுக பிரமுகர் அசோக்குமார் என்பவருக்கு சொந்தமான பேக்கரியில் ஆயுதத்துடன் புகுந்த 4 பேர் கொண்ட கும்பல் அதனை அடித்து நொறுக்கியது. அருகில் இருந்த வங்கியின் ஜன்னல் கதவுகள், வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களையும் அடித்து நொறுக்கிவிட்டு அவர்கள் தப்பிச்சென்றனர். இது தொடர்பான புகாரில் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் திமுக பிரமுகர் அசோக் உள்ளிட்ட 4 பேர் தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனையடுத்து 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். திமுக வாடிப்பட்டி பேரூர் செயலாளர் பிரகாசத்தின் தூண்டுதலின்பேரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. தாக்குதல் தொடர்பான செய்தி புதிய தலைமுறையில் வெளியான நிலையில், பேரூர் செயலாளராக பொறுப்பு வகித்த பிரகாசம், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலும் இருந்து தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com