வடபழனி கோயிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு: அமைச்சர் சேகர் பாபு அறிவிப்பு
சென்னையில் வடபழனி கோயிலுக்கு சொந்தமான ரூ.250 கோடி மதிப்பிலான 5.5. ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டிருப்பதாக, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள கோயில் நிலங்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெறும் என்றும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
இன்று சாலிகிராமத்தில் இந்த மீட்புப் பணி நடைபெற்ற நிலையில், அதைத்தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர், “சாலிகிராமம் கருணாநிதி தெருவில், 250 கோடி மதிப்புள்ள 5.50 ஏக்கர் கோயில் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. அந்த இடத்தில், வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. அவற்றை அப்புறப்படுத்த, 48 மணி நேரம் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது” எனக்கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து அனைத்து சாதியனரும் அர்ச்சகர் ஆகும் சட்டம், 100 நாள்களில் செயல்படுத்தப்படும் என அவர் உறுதியளித்திருக்கிறார்.