\
தீ விபத்து ஏற்பட்டது அங்கீகாரமற்ற கட்டிடம்: மாநகராட்சி

தீ விபத்து ஏற்பட்டது அங்கீகாரமற்ற கட்டிடம்: மாநகராட்சி

தீ விபத்து ஏற்பட்டது அங்கீகாரமற்ற கட்டிடம்: மாநகராட்சி
Published on

சென்னை வடபழனியில் தீ விபத்து ஏற்பட்ட கட்டிடம், முறையான அனுமதி பெறாத கட்டிடம் என சென்னை மாநகராட்சி கூறியுள்ளது.

சென்னை வடபழனி தெற்கு சிவன் கோயில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இன்று அதிகாலை தீவிபத்து ஏற்பட்டது. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சஞ்சய் (வயது 3), சந்தியா (10) மீனாட்சி (60), செல்வி (35) ஆகியோர் பரிதாபமாக பலியாயினர். படுகாயமடைந்த 5 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்தக் கட்டிடம் உரிய அனுமதி பெறாமல் கட்டப்பட்டது என்று சென்னை மாநகராட்சி கூறியுள்ளது.

’2004ல் கட்டப்பட்ட கட்டிடத்துக்கு உரிய அனுமதி பெறவில்லை. மின் இணைப்பு, குடிநீர் வினியோகத்துக்கும் முறையான அனுமதி பெறவில்லை. 2016ம் ஆண்டே சீல் வைக்கப்பட்ட கட்டிடம் இது. உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று சென்னை மாநகராட்சி கூறியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com