தமிழகத்தில் இன்று முதல் தடுப்பூசி திருவிழா தொடக்கம்!
தமிழகத்தில் இன்று தொடங்கி 3 நாட்களுக்கு தடுப்பூசி திருவிழா நடைபெறுகிறது.
தற்போது தினமும் ஒரு லட்சத்துக்கு 25 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் அந்த எண்ணிக்கையை 2 லட்சமாக உயர்த்த சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது. அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகள், அரசு மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், நகர்புற மற்றும் கிராமப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்ட ஆயிரத்து 900 மினி கிளினிக்குகள், தடுப்பூசி செலுத்த அனுமதி பெற்ற தனியார் மருத்துவமனைகள் என 4,328 மையங்கள் கோவிட் தடுப்பூசி போடப்பட்டு வருகின்றன.
இதில் 3,797 மையங்களில் கோவிஷீல்டு தடுப்பூசியும், 531 மையங்களில் கோவேக்சின் தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது. இந்த மையங்களில் சுமார் 4 லட்சம் பேருக்கு தினமும் தடுப்பூசி போட முடியும். இதன் காரணமாக தடுப்பூசி திருவிழாவுக்கு என தனியாக பிரத்யேக மையங்கள் திறக்கப்படவில்லை.