ஊத்துக்கோட்டை | விபூதி தட்டை வணங்கி கோயில் உண்டியல் பணத்தை திருடிய மர்ம நபர்!
ஊத்துக்கோட்டை அருகே கோயில் உண்டியல் காணிக்கையைத் திருடும் மர்ம நபர்.. வெளியான சிசிடிவி காட்சிகள்!
ஊத்துக்கோட்டை அருகே அம்மன் கோயில் பூட்டை உடைத்து உண்டியல் பணம் திருடுவதற்கு முன்பு விபூதி தட்டை தொட்டு வணங்கி மர்ம நபர் ஒருவர் பணத்தை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி பதிவாகியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த பாலவாக்கம் ஏரிக்கரை பகுதியில் உள்ள செல்லியம்மன் கோயிலில், நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் தமது முகத்தை கை துண்டால் மூடிக்கொண்டு கோயிலின் இரும்பு கேட்டின் பூட்டை உடைத்து உள்ளே வைத்திருந்த உண்டியலில் இருந்த பணத்தை திருடி சென்றுள்ளார்.
அவர் கேட்டை திறந்து சென்ற போது அவரது கால் தவறி விபூதி பிரசாதம் தட்டை மிதித்த போது, அவர் அதை பய பக்தியுடன் வணங்கியும் உண்டியலில் இருந்து திருடப்பட்ட பணத்தை தமது பேண்ட் பாக்கெட்டில் வைத்து கொண்டு செல்லும் சிசிடிவி காட்சிகள் பதிவாகியுள்ளது.
இது குறித்து கிராம மக்கள் ஊத்துக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளை கொண்டு உண்டியல் பணத்தை திருடிய நபரை அடையாளம் காணும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.