கல்குவாரிக்கு எதிர்ப்பு : மயானத்தில் குடியேறும் போராட்டத்தில் குதித்த கிராம மக்கள்...!

கல்குவாரிக்கு எதிர்ப்பு : மயானத்தில் குடியேறும் போராட்டத்தில் குதித்த கிராம மக்கள்...!

கல்குவாரிக்கு எதிர்ப்பு : மயானத்தில் குடியேறும் போராட்டத்தில் குதித்த கிராம மக்கள்...!

பழவேரியில் புதிய கல்குவாரி துவங்க எதிர்ப்பு தெரிவித்து இரண்டாவது நாளாக மயானத்தில் குடியேறும் போராட்டத்தில், அப்பகுதி கிராமத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

உத்திரமேரூர் ஒன்றியம், பழவேரி கிராமத்தில், குடியிருப்புகளுக்கு அருகே உள்ள விவசாயிகளின், 19 ஏக்கர் நிலத்தை, 10 ஆண்டுகளுக்கு முன், தனியார் நிறுவனம் ஒன்று விலைக்கு வாங்கியது. இந்நிலம், கிராமத்திற்கு மிக அருகே உள்ள போதிலும், அரசு விதிமுறைகளுக்கு மாறாக, கல் குவாரி அமைக்க அரசிடம் அனுமதி பெற்றுள்ளதாகவும் ஏற்கனவே இப்பகுதியில் கல் குவாரி, கிரஷர், எம்.சாண்ட் போன்ற குவாரிகள் இயங்குவதால் இந்த புதிய கல் குவாரியும் இயங்கினால் வீடுகளில் விரிசல் ஏற்படுவதோடு, விவசாயமும் முற்றிலும் சீரழியும் எனவும் கூறி அப்பகுதிவாசிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

எனினும், அக்டோபர் மாதம் துவங்கப்பட்ட கல் குவாரி, கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் குவாரி செயல்படாமல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதையடுத்து, மாவட்ட நிர்வாகம், கல்குவாரி நிர்வாகம் மற்றும் கிராம மக்கள் இணைந்த முத்தரப்பு பேச்சு, கடந்த வாரம், காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. இதில், முடிவு எதுவும் எட்டப்படாத நிலையில், நேற்று காலை, குவாரி திறக்கப்பட்டுள்ளது. இதனால், 100க்கும் மேற்பட்ட பழவேரி கிராமத்தினர், குவாரியை இயக்கக்கூடாது எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

உத்திரமேரூர் தாசில்தார், சாலவாக்கம் போலீசார் உள்ளிட்டோர் வந்து, அவர்களை சமரசப்படுத்தினர். இதையேற்காத கிராமத்தினர், குழந்தைகள், முதியவர், பெண்கள் என, அனைவரும், மயானத்தில் குடியேறும் போராட்டத்தை மேற்கொண்டனர். தற்போது இரண்டாவது நாளாக மயானத்திலேயே, அம்மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com