\
உத்திரமேரூர்: ஆதார், பான் கார்டு நகல் கொடுத்தால் ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் இலவசம்

உத்திரமேரூர்: ஆதார், பான் கார்டு நகல் கொடுத்தால் ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் இலவசம்

உத்திரமேரூர்: ஆதார், பான் கார்டு நகல் கொடுத்தால் ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் இலவசம்
Published on: 

ஆதார், பான் கார்டு நகல் கொடுத்தால் இலவசமாக ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் வழங்கப்படும் என பெட்ரோல் பங்க் அறிவித்ததால், பல கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் அங்கு குவிந்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியில் இயங்கிவரும் இந்தியன் பெட்ரோல் பங்கில் ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு ஆகியவற்றின் நகலை கொடுத்தால் ஒரு லிட்டர் பெட்ரோல் வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டது. தனியார் நிறுவனம் ஒன்று பொதுமக்களிடமிருந்து ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு நகல்களை பெற்றுக்கொண்டு அவர்களுக்கு ஒரு லிட்டர் இலவசமாக பெட்ரோல் மற்றும் டீசலை கொடுக்கிறார்கள். இந்த இலவச பெட்ரோலை பெறுவதற்காக பல கிராமங்களில் இருந்து பொதுமக்கள் தங்களுடைய ஆதார் மற்றும் பான் கார்டு ஜெராக்ஸ் எடுத்துக் கொண்டு பெட்ரோல் பங்க் நோக்கி வந்தவண்ணம் இருக்கிறார்கள்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com