கந்துவட்டி கொடுமையால் கோவை பெண் தற்கொலை முயற்சி

கந்துவட்டி கொடுமையால் கோவை பெண் தற்கொலை முயற்சி
கந்துவட்டி கொடுமையால் கோவை பெண் தற்கொலை முயற்சி

கோவை ஆலந்தூரைச் சேர்ந்த நித்யா என்ற பெண் கந்துவட்டி கொடுமையால் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றார்.

கடந்தாண்டு நிஷா என்பவரிடம் வீட்டை அடமானம் வைத்து 1.5 லட்சம் ரூபாயை நித்யா கடன் வாங்கியுள்ளார். அதற்கு வட்டியுடன் 4 லட்சத்து 80,000 ரூபாய் திருப்பி தர நிஷா வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. அதனால், வீட்டை விற்று கடனை அடைக்க முடிவு செய்த நித்யா, வேறொரு பத்திரத்தை ஜாமீனாக கொடுத்து வீட்டுப்பத்திரத்தை வாங்கி விற்றுள்ளார். வட்டியுடன், அசலையும் திருப்பி செலுத்திய பின் ஜாமீனாக கொடுத்த பத்திரத்தை நித்யா கேட்டுள்ளார். ஆனால், மேலும், 2 லட்சத்து 40,000 ரூபாய் கொடுத்தால் மட்டுமே பத்திரத்தை தரமுடியும் என நிஷா கூறியதாக தெரிகிறது. அதனால், மனமுடைந்த நித்யா நேற்றிரவு விஷமருந்தி தற்கொலைக்கு முயன்று கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து நித்யாவின் கணவர் பாலகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com