வயல் வேலைக்கு வந்த பெண் இடி தாக்கி உயிரிழப்பு
உசிலம்பட்டி அருகே வயல் வேலைக்கு வந்த பெண் இடி தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரை அடுத்துள்ள அரியூரைச் சேர்ந்தவர் கண்ணம்மாள், இவரது தலைமையில் இந்தப் பகுதி மட்டுமல்லாது சுற்றுவட்டார பகுதிகளில் நெல் நாற்று விநியோகம் செய்வது, நாற்றுகளை குழுவினருடன் சென்று நாற்று நடுவதை வழக்கமாக கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் உசிலம்பட்டி அருகே குறவடியைச் சேர்ந்த பாண்டி என்பவரது தோட்டத்தில் நெல் நாற்று நட வந்த இந்த அலங்காநல்லூரைச் சேர்ந்த கண்ணம்மாள் குழுவினர் நாற்று நட்டு கொண்டிருந்த போது கண்ணம்மாள் அணிந்திருந்த தாளியில் இடி தாக்கியதாகவும், இதனால் துடிதுடித்த கண்ணம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
சம்பவமறிந்து விரைந்து வந்த வாலாந்தூர் போலிசார் உடலைக் கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.