gold theftpt desk
தமிழ்நாடு
உசிலம்பட்டி: அடுத்தடுத்த வீடுகளில் ஒரே மாதிரி கைவரிசை காட்டிய கும்பல் - 45 பவுன் தங்க நகைகள் கொள்ளை!
உசிலம்பட்டியில் அடுத்தடுத்த வீடுகளில் ஒரே மாதிரி கைவரிசை காட்டிய கொள்ளை கும்பல், 45 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பி.எம்.டி. நகர் மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர் ரவி. தனியார் செக்யூரிட்டி நிறுவனம் நடத்தி வரும் இவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள், வீட்டின் பிரோவில் இருந்த 45 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
dogpt desk
இதே போன்று உசிலம்பட்டி அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரது வீட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் வீட்டின் பிரோவை உடைத்து திருட முயற்சிகத்துள்ளனர்.
ஆனால், அங்கு பணம் மற்றும்ட நகை இல்லாததால் காவலுக்கு இருந்த நாயை தாக்கிவிட்டுச் சென்றுள்ளனர். படுகாயமடைந்த நாய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.