உடம்பு முடியாத நிலையிலும் ஸ்ட்ரெச்சரில் வந்து வாக்களித்த இளைஞர்

உடம்பு முடியாத நிலையிலும் ஸ்ட்ரெச்சரில் வந்து வாக்களித்த இளைஞர்
உடம்பு முடியாத நிலையிலும் ஸ்ட்ரெச்சரில் வந்து வாக்களித்த இளைஞர்

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும்நிலையில், ஜனநாயக கடைமை ஆற்றும் வகையில், மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து நேரடியாக வாக்குச்சாவடிக்கு சென்று இளைஞர் ஒருவர் தனது வாக்கினை பதிவு செய்தார்.

தமிழகத்தின் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என மொத்தம் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதையடுத்து சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும், நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலும், இளைஞர் ஒருவர் வாக்குசாவடிக்கு வந்து, தனது வாக்கினை பதிவு செய்துள்ளார். 

திருப்பூர், பத்மாவதிபுரத்தை சேர்ந்த மதன கோபால் என்பவரது மகன் ஜானகி ராமன் (20). கடந்த பத்து நாட்களுக்கு முன்பாக, நடந்த சாலை விபத்தில் இவருக்கு கால் முறிவு ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து, தனியார் மருத்துவமனையில், ஜானகி ராமன் சிகிச்சையில் இருந்து வருகிறார். எனினும், வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்ந்து இன்று நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், தனது வாக்கினை செலுத்த ஆம்புலன்ஸில், திருப்பூர் மும்மூர்த்தி நகர் பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்தார். பின்னர், அவருடன் வந்தவர்களின் உதவியுடன் தனது வாக்கினை அந்த இளைஞர் பதிவு செய்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com