தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி மாலை அறிவிப்பு
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு இன்று மாலை 6.30க்கு வெளியாகவுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.
உள்ளாட்சித் தேர்தல் குறித்த வழக்கு உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், வரும் 27ஆம் தேதிக்குள் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிடவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இன்று மாலை 6.30 மணியளவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. சென்னை அரும்பாக்கம் அலுவலகத்தில் தேர்தல் அட்டவணையை ஆணையர் பழனிகுமார் வெளியிடவுள்ளார்.
ஊரக உள்ளாட்சித் தேர்தல் பதவிகளுக்கு ஏற்கெனவே தேர்தல் நடந்துமுடிந்த நிலையில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான தேர்தல் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன் நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது.