உ.பி.யில் இருவர் மீது தாக்குதல் - மன்னிப்பு கேட்ட போலீஸ்

உ.பி.யில் இருவர் மீது தாக்குதல் - மன்னிப்பு கேட்ட போலீஸ்
உ.பி.யில் இருவர் மீது தாக்குதல் - மன்னிப்பு கேட்ட போலீஸ்

உத்தரப்பிரதேசத்தில் காவல்துறையினர் கண் முன்னே ஒருவர் அடித்து இழுத்து வரப்படும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் ஹபூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் குவாஸிம் (45) மற்றும் சமாயுதீன் (65). இவர்கள் மாட்டு இறைச்சிக் கடை வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர்கள் கன்றை கொன்றதாக வதந்தி பரவியுள்ளது. அதன்அடிப்படையில் அவர்களை சூழ்ந்த கும்பல் ஒன்று, இருவரையும் கடுமையாக தாக்கியுள்ளது. இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மூன்று காவல்துறையினர் அவர்களை மருத்துவமனையில் அனுமதிக்குமாறு கூறியுள்ளனர். ஆம்புலன்ஸ் இல்லாத காரணத்தால், அவர்களை அந்தக் கும்பல் தரையில் கட்டி இழுந்து வந்துள்ளது. 

இந்தச் சம்பவத்தின் போது மூன்று காவலர்கள் முன்னால் நடந்து வர, பின்னால் அந்த இருவரையும் கும்பல் இழுத்து வந்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலரும் இதற்கு கண்டனங்களை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் உத்தரப்பிரதேச காவல்துறை இதற்கு வருத்தம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட குவாஸிம் உயிரிழந்துள்ளார். சமாயுதீன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com