\
உ.பி. முதல் கட்டத் தேர்தல்: நாளை மாலை பரப்புரை முடிகிறது

உ.பி. முதல் கட்டத் தேர்தல்: நாளை மாலை பரப்புரை முடிகிறது

உ.பி. முதல் கட்டத் தேர்தல்: நாளை மாலை பரப்புரை முடிகிறது
Published on: 

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவுக்கு பரப்புரை நாளை மாலை முடிய உள்ள நிலையில், பரப்புரை உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் பிப்ரவரி 10 ஆம் தேதி தொடங்கி மார்ச் 7 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதல் கட்ட வாக்குப்பதிவுக்கு 3 நாட்களே உள்ள நிலையில், பரப்புரை நாளை மாலையுடன் முடிவடைய உள்ளது. இதையடுத்து, வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே, அமேதி தொகுதி உள்பட தேர்தலில் போட்டியிடும் மேலும் 45 வேட்பாளர்களின் பட்டியலை பாரதிய ஜனதா கட்சி வெளியிட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com