ரயில்
ரயில்எக்ஸ் தளம்

மதுரை - சென்னை இடையே முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் இயக்கம்!

விடுமுறைக்கு சென்ற பயணிகள் மீண்டும் திரும்புவதற்கு ஏதுவாக மதுரை-சென்னை இடையே முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
Published on
Summary

விடுமுறைக்கு சென்ற பயணிகள் மீண்டும் திரும்புவதற்கு ஏதுவாக மதுரை-சென்னை இடையே முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

தொடர் விடுமுறை முடிந்து ஊர்திரும்புவோர் வசதிக்காக, சென்னை -மதுரை இடையே முன்பதிவுசெய்யப்படாத சிறப்பு ரயில் இயக்கப்படஉள்ளது.

சென்னை எழும்பூரில் இருந்து சனிக்கிழமை இரவு 11:45 மணிக்கு புறப்படும் சிறப்பு மெமு ரயில், மறுநாள்காலை 10:15 மணிக்கு மதுரை சென்றடையும். இந்த ரயில்செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், சோழவந்தான் வழியாக இயக்கப்படும்.

மறுமார்க்கமாக மதுரையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்குபுறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை6 மணிக்கு தாம்பரத்துக்கு செல்லும். இந்த ரயிலில் 12 பெட்டிகள் இருக்கும் எனதெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

நெல்லை-தாம்பரம் சிறப்பு ரயில்..

ஆயுதப்பூஜை விடுமுறையையொட்டி நெல்லையில் இருந்து தாம்பரத்திற்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

நெல்லையில் இருந்து அக்டோபர் 5-ம் தேதி மாலை 4.50 மணிக்கு புறப்படும் ரயில் (06014) அடுத்த நாள் அதிகாலை 3 மணிக்கு தாம்பரம் வந்தடையும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com