வரலாறு காணாத அளவில் கொட்டித் தீர்த்த கோடை மழை: காவிரியில் வெள்ளம்

வரலாறு காணாத அளவில் கொட்டித் தீர்த்த கோடை மழை: காவிரியில் வெள்ளம்
வரலாறு காணாத அளவில் கொட்டித் தீர்த்த கோடை மழை: காவிரியில் வெள்ளம்

வரலாறு காணாத அளவில் கோடை காலத்தில் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. இந்நிலையில் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 500 கன அடியில் இருந்து படிப்படியாக உயர்ந்து வருகிறது. தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கோடை மழை பெய்து வருவதால், காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 5000 கன அடியாக இருந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வினாடிக்கு 5000 கன அடியிலிருந்து 7500 கன அடியாக உயர்ந்தது. இதனைத் தொடர்ந்து தமிழக, கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கோடை மழை தீவிரம் அடைந்ததால், நேற்று முன்தினம் வினாடிக்கு 30 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரித்தது.

தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல் அருவி, மற்றும் ஆற்றில் குளிக்கவும், பரிசல் பயணம் செய்யவும் சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இந்நிலையில் மழை குறைந்ததால் நேற்று நீர்வரத்து வினாடிக்கு 30 ஆயிரம் கன அடியிலிருந்து 20 ஆயிரம் கன அடியாக குறைந்தது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு 50 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து உயர்ந்தது.

இதனால் ஒகேனக்கல் அருவிக்கு செல்லும் நடைமேடை, பிரதான அருவிகள் மற்றும் பாறைகளை மூழ்கடித்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வரலாற்றில் கோடை காலத்தில் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுவது இதுவே முதல் முறை. இதனால் காவிரி ஆற்றில் ஊட்டமலை, ஆலம்பாடி, ஒகேனக்கல் போன்ற பகுதிகளில் காவல் துறையினர், வருவாய்த் துறையினர், தீயணைப்புத் துறையினர், ஊரக வளர்ச்சித் துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com