\
கூடுதல் தளர்வுகள் என்னென்ன ?: முதல்வர் ஆலோசனை !

கூடுதல் தளர்வுகள் என்னென்ன ?: முதல்வர் ஆலோசனை !

கூடுதல் தளர்வுகள் என்னென்ன ?: முதல்வர் ஆலோசனை !
Published on

பொதுமுடக்கம் நீட்டிப்பு, தளர்வுகள் அறிவிப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவக் குழுவினருடன் முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தி வருகிறார்.

கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் செப்டம்பர் 30ஆம் தேதி நிறைவடைகிறது. இந்த நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இந்த ஆலோசனைக் கூட்டத்தை நடத்துகிறார்.

பொதுமுடக்கம் நீட்டிப்பு, மேலும் சில தளர்வுகளை அறிவிப்பது தொடர்பாக, காலையில் காணொலி வாயிலாக மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்துகிறார். அதனைதொடர்ந்து, மருத்துவ நிபுணர்கள் குழுவை சந்திக்க இருக்கிறார். கொரோனா அதிகரித்து வரும் சூழலில், அதனை எவ்வாறு கையாள்வது, மருத்துவ வசதிகளை அதிகரிப்பது போன்றவை இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com