\
வானத்தில் இருந்து விழுந்த மர்மப் பொருள் ? - வேலூரில் பரபரப்பு

வானத்தில் இருந்து விழுந்த மர்மப் பொருள் ? - வேலூரில் பரபரப்பு

வானத்தில் இருந்து விழுந்த மர்மப் பொருள் ? - வேலூரில் பரபரப்பு
Published on

வேலூரில் இரவு வானத்தில் இருந்து மர்ம பொருள் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தை அடுத்த கவசம்பட்டு பகுதியில், வானத்தில் இருந்து இரவில் மர்மப்பொருள் விழுந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். அந்த‌பொருளில் இரண்டு சிறு மின்விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. இதனையடுத்து உடனடியாக கேவி குப்பம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 

இதையடுத்து தடயவியல் வல்லுநர்களுடன் வந்த காவல்துறையினர் ஆய்வு செய்தததில் அது வெடிபொருள் அல்ல என்பது தெரியவந்தது. வானிலை ஆய்வு சம்பந்தப்பட்ட பொருள் என்று‌கூறிய காவல்துறையினர் இதனை முழு ஆய்வுக்கு உட்படுத்த உள்ளதாக தெரிவித்த‌னர். இப்பொருள் எங்கிருந்து அனுப்பப்பட்டது. எப்படி வானில் இருந்து விழுந்தது என்றும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com